திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இடை விலகிய இராணுவ வீரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மொரவெவ-தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ரொஷான் திலின (22 வயது) என்ற இடை விலகிய இராணுவ வீரர் ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவ வீரர் கைது
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது, இராணுவத்திலிருந்து இடை விலகிய இராணுவ வீரர்களை கைது செய்வதற்காக திருகோணமலை இராணுவ முகாமிலிருந்து சென்ற கெப் வாகனமே இவ்வாறு விபத்துக்கு இலக்காகியுள்ளது.
இராணுவ கெப் வாகனத்தில் இடைவிலகிய இராணுவ வீரர்களை ஏற்றுச் செல்லும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் இடை விலகிய இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் மற்றுமொரு இராணுவ வீரர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த கெப் வாகனத்தின் சாரதியான இராணுவ வீரரை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment