Press "Enter" to skip to content

கைதாவதை தடுக்கக்கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர்நீதிமன்றில் மனு!

காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தான் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்டோருக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக  1640 அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

கத்தோலிக்க மதகுருமார்கள் கையொப்பமிட்ட இந்த கூட்டறிக்கையில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உள்ளிட்டோரை கைது செய்வதற்கான முயற்சிகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ‘மாற்றத்திற்கான இளைஞர்கள்’ அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்ட 6 பேர்  வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்த 25 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில், காவல்துறை தலைமையகத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக பொதுமக்களை ஒன்றுகூட்டி, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *