மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் சந்தியில் நேற்று(01) ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம்
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்தவர்களின் உதவி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment