முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பும் பட்சத்தில் அவருடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்
என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாம் கட்சி என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கான ஆதரவை நாம் வழங்கினோம்.
அதற்கமைய தற்போதுள்ள பெரும்பான்;மை உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற வகையில் நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதற்கு அங்கத்தவர்கள் ஆக வேண்டியது அவசியமானதாகும்.
ஏனெனில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Be First to Comment