யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ள நிலையில் வாள்களுடன் மக்களை அச்சுறுத்திய வந்த நிலையில் ஒருவர் ஊர் இளைஞர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார்
சங்கரத்தைச் சந்தியில் நேற்று (01) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வட்டுத்தெற்கு மற்றும் மூளாய் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு வாள்களுடன் நடமாடியுள்ளனர்.
அதனை அவதானித்த வட்டுக்கோட்டை இளைஞர்களில் ஒருவர் சந்தேகம் கொண்டு வழிமறிக்க முற்பட்ட வேளை மூவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி வீதியில் வீழ்ந்துள்ளனர். அவர்களில் இருவர் வாள்கள் இரண்டை கைவிட்டு தப்பித்த நிலையில் ஒருவர் காயங்களுடன் சிக்கிக்கொண்டார்.
வாள்களுடன் சிக்கிக்கொண்ட மூளாயைச் சேர்ந்தவர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இரண்டு வாள்கள் மற்றும் மோட்டார்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Be First to Comment