எதிர்வரும் ஐந்தாம் திகதி மாலை ஐந்து மணிக்கு முன்னதாக காலி முகத்திடலில் அரசுக்கோ அல்லது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கோ உரிமையான இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களின் சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படவேண்டும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இன்று மாலை குறித்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த உத்தரவை ஒலிப்பெருக்கியின் மூலம் அறிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை காவல்துறை நிலையத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Be First to Comment