Press "Enter" to skip to content

தற்போதைய பிரச்சினைகள் டிசம்பர் வரை தொடரும் என ஜனாதிபதி தெளிவுபடுத்தினார் -ரஞ்சித் மத்தும பண்டார

நாட்டின் பெரும்பான்மையான பொதுப் பிரச்சினைகள் டிசம்பர் வரை தொடரும் என்பதை ஜனாதிபதியின் சிம்மாசன உரை தெளிவுபடுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் உரையில் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்படவில்லை என்பது கேள்விக்குரியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

டிசெம்பர் மாதம் வரை எரிபொருள் நெருக்கடி தொடரும் எனவும், இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் அரச சேவை மற்றும் ஏனைய தொழில்களும் தடைபடும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கத் தவறியதாகவும், கடந்த கால பிரச்சினைகளை மறந்துவிடுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இளைஞர்கள் தலைமையிலான மக்கள் போராட்டம் ஒரு மாற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்த ஜனாதிபதி தவறிவிட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்களை சி.ஐ.டி., எஸ்.டி.எஃப் மற்றும் பொலிஸார் வேட்டையாடுவதாகவும், அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை கைவிடுமாறு அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *