பிரித்தானியாவில் 10 வருடங்களுக்கு முன்னர், கடத்தப்பட்ட தனது மகளை தேடும் இலங்கையை சேர்ந்த தந்தை ஒருவர் முக்கிய தகவல்களை வெளிட்டுள்ளார்.
தற்போது காலியில் வாழும் சிறிவர்தன என்பவர் தனது மகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
“பிரித்தானியாவில் பத்து வருடங்களாக தீவிரவாத கும்பலால் சிறைபிடிக்கப்பட்ட எனது மகளை விடுதலை செய்” என்ற வாசகம் அடங்கிய வான் ஒன்று தென்னிலங்கையில் சுற்றித் திரிகிறது.
திர்ஸ்மி டி சொய்சா சிறிவர்தன என்ற யுவதி 10 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் தனது 14ஆவது வயதில் கடத்தப்பட்டார். இதன்போது குறித்த யுவதி தனது தாய், தந்தையுடன் பிரித்தானியாவில் வசித்து வந்தார்.
2012ஆம் ஆண்டு பிரித்தானியாவின் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவு என அறிமுகப்படுத்தப்பட்ட குழுவொன்று வந்து தனது மகளைக் கடத்திச் சென்றதாக அவரது தந்தை சேனக சொய்சா சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு நாட்டின் அனைத்து பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்ட போதிலும், கடத்தப்பட்ட மகள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட தந்தை, 2001 ஆம் ஆண்டு அப்போது மூன்று வயதுடைய எனது அன்பு மகளுடன் பிரித்தானியா சென்றோம்.
2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நானும் எனது மனைவியும் மகளும் வீட்டில் இருந்தபோது, பிரித்தானியாவில் தேசிய குற்றவியல் பிரிவு என கூறும் கும்பல் வீட்டிற்குள் புகுந்து எனது 14 வயது மகளை கூட்டு பலாத்காரம் செய்து கடத்திச் சென்றது.
ஒரு தந்தையாக நான் அன்று முதல், நான் சொல்ல விரும்பும் அனைவரிடமும் சொன்னேன். ஆனால் இன்னும் பலன் இல்லை. அவர் இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக, பிரித்தானிய நாடாளுமன்றம், பிரபுக்கள் சபை, அமைச்சர்கள் சபை, நீதிமன்றம், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், என் உயிருக்கு அச்சுறுத்தல் வரத் தொடங்கியது. எனவே, ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு பெற்றேன். எனினும் நான் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி இலங்கைக்கு வந்தேன்.
மகளுக்கு விஷமருந்துகள் கொடுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் உள்ள இந்தப் பயங்கரவாதக் குழு இந்த நாட்டிலும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இது குறித்து பொலிஸ் தலைமையகத்திற்கும், மித்தியகொட பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
Be First to Comment