தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தந்தை இன்று உயிரிழந்துள்ளார்.
பிள்ளையானின் தந்தை, கோறளைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமாவார்.
இந்நிலையில் அவரது இறுதி அஞ்சலியில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். அந்தவகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ. யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் இந்திரகுமார் – பிரசன்னா, மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் பிள்லையானின் தந்தையின் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.
Be First to Comment