Press "Enter" to skip to content

சமையல் எரிவாயு சிலின்டர்களை பதுக்கிய யாழ்.திருநெல்வேலி வர்த்தகருக்கு 1 லட்சம் அபராதம்..

யாழ்.திருநெல்வேலியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சமையல் எரிவாயு சிலின்டர்களை பதுக்கிவைத்திருந்த வர்த்தகருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வர்த்தக நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்காமல் எரிவாயுகளை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த வர்த்தகநிலையம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது விற்பனை செய்யாது சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கியமை கண்டுபிடிக்கப்பட்டு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வழக்கு தெடுக்கப்பட்ட நிலையில்

குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் யாழ்.நீதிவான் நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *