Press "Enter" to skip to content

தானிஷ் அலிக்கு சிறையில் தொலைபேசி பாவித்ததால் 14 நாட்கள் சிறைத்தண்டனை

விளக்கமறியலில் தானிஷ் அலி மெகசின் சிறைச்சாலையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தானிஷ் அலி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலி சிறைச்சாலைகள் விதிமுறைகளை மீறி தொலைபேசி பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிறைச்சாலை நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, தானிஷ் அலி தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமையை அடுத்து, அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *