Press "Enter" to skip to content

நல்லூர் ஆலய பக்தர்களுக்கு யாழ்ப்பாண பொலிசாரின் விசேட அறிவிப்பு!

கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம் பெறவுள்ளது.

வழமையாக நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழமை எனவே நல்லூர் ஆலயவளாகத்தில் திருடர்கள் தமது கைவரிசியினை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றது

அதனை தடுக்க கூடியவாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிபுரையின் கீழ் விசேட பொலிஸ் அணிகள் சிவில் மற்றும் சீருடையில் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

எனினும் நல்லூர் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் பெறுமதியான நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பதோடு அதிகளவில் பணத்தினை ஆலயத்திற்கு எடுத்து வருவதை தவிர்க்குமாறும் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள்தமது வீடுகளை சரியாகபூட்டி வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி ஆலயத்திற்கு வரும் பட்சத்தில் திருட்டு சம்பவங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என யாழ்ப்பாண பொலிசார் அறிவித்துள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *