சமூக ஆர்வலர் பதும் கெர்னரை அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல உத்தரவிட்டுள்ளார்.
இந்த முறைப்பாடு இன்று அழைக்கப்பட்டபோது, பதும் கெர்னர் சார்பில் ஆஜரான ரியென்சி அர்சகுலரத்ன எதிர்ப்புத் தெரிவித்து, தனது கட்சிக்காரரின் புகைப்படங்கள் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் அணிவகுப்பு நடத்துவது சட்டரீதியானதில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், குறித்த ஆட்சேபனையை நிராகரித்த மேலதிக நீதவான் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.
Be First to Comment