தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்காக ஒரு மூடை யூரியா பசளையை 15,000 ரூபாவுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 30 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா பசளையை கமநல மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் செயற்பாடு கடந்த 3ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
நெற் செய்கைக்காக ஒரு மூடை யூரியா பசளை 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்பட்டது. எனினும், தேயிலை, சோளம், உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்காக ஒரு மூடை யூரியா பசளையை 15 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
Be First to Comment