Press "Enter" to skip to content

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 46 இலங்கையர்கள் மீண்டும் நாடு கடத்தப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூலை 21ஆம் திகதி அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது அவுஸ்திரேலிய எல்லைப் படை கப்பலான ஓஷன் ஷீல்டில் மூலம் வந்துள்ளனர்.

வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 17 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை அவுஸ்திரேலிய எல்லைப் படையினர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 1024 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு வரை கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் குடியேற முயற்சித்த 183 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *