இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிரிவிற்கான தலைவர் ரொனி முங்கொவன் தலைமையிலான குழுவினர், இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர். நீதியமைச்சர் மற்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் குழுவினரின் அறிக்கையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 51வது அமர்வில் புதிய மனித உரிமை ஆணையாளர் அல்லது இடைக்கால ஆணையாளர் சமர்ப்பிப்பார். இந்த அறிக்கையை தயாரிப்பதில் முக்கிய நபராக ரொனிமுங்கொவன் காணப்படுவார் எனவும், அவர் முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளன. மனித உரிமை பேரவையின் அமர்வு செப்டம்பர் 12ம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் ஏழுவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஐ.நா உயர் மட்டக்குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
- ஈபிடிபி கட்சி வேட்பாளர் அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் -பொலிஸார் விசாரணை
- ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற சிறீதரன்
- வர்த்தக அமைச்சருக்கு நிவ் ரத்ன அரிசி உரிமையாளர் பதிலடி
- யாழில் 300 பவுண் தங்க நகைகளை திருடி கொழும்பில் சொகுசு வாழ்க்கை! புங்குடுதீவை சேர்ந்த நபர் ஆயுதங்கள், கைக்குண்டுடன் கைது!!
- காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு அநுர அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்காது- அமலநாயகி ஆதங்கம்..!
Be First to Comment