சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் நிலையில், இதை சிக்கலுக்குள்ளாக்க நினைப்பவர்களும் உள்ளனர் என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் .
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒரு பகுதியினர் தயாராக இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சர்வகட்சி அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு தமக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்
Be First to Comment