தாய்வான் விடயத்தில் சீனா ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனா, தங்களது தரப்பின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒத்திகை பார்த்ததாக தாய்வான் அறிவித்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சீனா தாய்வான் மீதான நிலையை மாற்ற முயற்சிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்க சிரேஷ்ட ஜனநாயக கட்சியின் நான்சி பெலோசி தலைமையிhன தூதுக்குழு தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டமையில் இருந்து பதற்ற நிலைமை அதிகரித்துள்ளது.
தாய்வான் மீதான தமது உரிமைகோரல்களுக்கு இந்த விஜயத்தை சீனா சவாலாக கருதுகிறது.
இந்தநிலையில் தாய்வான் ஜலசந்தியில் நேற்றைய தினம் சீனக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் என்பன பயணித்ததாக தாய்வான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இது அதிகாரப்பூர்வமற்ற நடவடிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களை எச்சரிப்பதற்கு தாய்வான், போர் விமானங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சீனா இதுவரையில் பதிலளிக்கவில்லை.
Be First to Comment