திருகோணமலை மூதுார் சேனையூரில் பேராசிரியர் பாலசுகுமாரனின் மகள் அனாமிகா நினைவாக அமைக்கபட்ட ”அனாமிகா களரி பண்பாட்டு அமையத்தின்” திறப்பு விழா 6 ஆம் திகதி இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் நாசர் அதிதியாக கலந்து கொண்டார்.
அத்துடன் கிழக்குப பல்லைக்கழக துணைவேந்தர் வ.கனகசிங்கம் மற்றும் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேராசிரியர் சி.மௌனகுரு பேராசிரியர் ச.மனோன்மணி உற்பட பல பேராசிரியர்களும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் கிழக்கு மாகாண கலாச்சார திணைக்கள பணிப்பாளர் சு.சரண்யா உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் கருத்தாடலும் 07ம் திகதியும் இடம் பெற்றது.
Be First to Comment