மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஜுவத்தை பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் சிலையை, சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர்வாசிகள் குழுவினர் பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்குச் சென்றபோது, தேவாலயம் சேதமடைந்திருப்பதைக் கண்டு பொலிசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தேவாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் கவசம் மட்டுமே சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் மன்னாரில் பல இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
மன்னார் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தாக்குதல்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment