ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடைய பாணியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
புளொட் எனப்படும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பத்தாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதனால் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் ஒருவருக்கு ஒருவர் சந்தேக பார்வையுடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment