Press "Enter" to skip to content

இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழைகிறது சீனாவின் சினோபெக்?

சீனாவின் மிகப் பெரிய எரிபொருள் நிறுவனமான சினோபெக், இலங்கை எரிபொருள் சந்தையில் நுழைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் தொடங்குவதற்கும் அனுமதியளிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் அனுமதி அளித்தது. இந்த பிரேரணை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் 90 வீதம் அரசுக்கு சொந்தமான சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும், எஞ்சிய 10 வீதமானது லங்கா ஐஓசி மூலமாகவும் வழங்கப்படுகிறது.

சினோபெக் ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எண்ணெய் கிடங்கை இயக்குகிறது. சினோபெக்கின் ஹம்பாந்தோட்டை எண்ணெய் கிடங்குக்கு 2020 ஏப்ரலில் Lloyd’s Register மூலம் FSS சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *