ஓட்டுமடம் பகுதியில் உள்ள லாப்ஸ் சமையல் எரிவாயு களஞ்சியத்தை உடைத்து அங்கிருந்த சுமார் 52 வெற்று சிலின்டர்களை திருடிய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் ஓட்டுமடம் பகுதியில் உள்ள லாப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 7 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 52 வெற்றுச் சிலிண்டர்கள் திருட்டுப் போயிருந்தன.
சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான
மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். யாழ்.பொம்மைவெளி மற்றும் நாவாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டடனர்.
சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டன
Be First to Comment