குறித்த சம்பவம் இன்று(08) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்றுகாலை சித்தங்கேணியில் இருந்து வட்டுக்கோட்டை பக்கமாக சென்ற மகேந்திரா வாகனம் வீதியை விட்டு பிழையான பக்கத்திற்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ளது.
படுகாயமடைந்த இளைஞன்
படுகாயமடைந்த இளைஞன் தனது வீட்டின் படலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டு படலையினை திறந்துகொண்டிருக்கும் போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதனால் இளைஞரின் ஒரு கால் முற்றாக முறிந்துள்ளதுடன் மற்றைய காலிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இளைஞரின் மோட்டார் சைக்கிள் முற்றாகவே சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள்
அவசரசேவை நோயாளர் காவு வண்டி மூலம் இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வாகனத்தின் சாரதியை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment