நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறு நடக்குமானால் அது தவறு தான். அந்த தவறுகளை வெளிப்படுத்த ஒருபோதும் பின் நிற்க மாட்டோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டம் தொடர்பிலும், பிரஜைகளின் உரிமை தொடர்பிலும் அக்கறை கொண்டுள்ளோம். எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தவறு நடக்குமாயின் அது தவறு தான் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட போவதாக கடந்த டிசம்பர் மாதம் புத்திஜீவிகள் சிலர் குறிப்பிட்டு இருந்தனர். சட்டத்தரணிகள் சங்கமும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தது.
நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் அது சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அமையும். அது தொடர்பில் நாம் அறிக்கை ஒன்றை வெளியிட தீர்மானித்தோம்.
பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீர்ப்பதென எம்மால் கூற முடியாது. ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறுவோம்.- என்றார்
Be First to Comment