மேலும் 3,800 மெட்ரிக் தொன் எரிவாயு இறக்குமதி இன்று இரவு நாட்டிற்கு வரவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பரிசோதித்ததைத் தொடர்ந்து நாளை காலை கையிருப்புகளை இறக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 22 நாட்களில், லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2.7 மில்லியன் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எரிவாயுவின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி இன்று 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200க்கு மேல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிவாயு விலை இன்று குறைவடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Be First to Comment