ஒழுக்கத்தையும் ஜனநாயகத்தையும் மறந்து முரட்டுத்தனமான தீர்மானங்களை எடுத்திருந்தால் இன்று இந்த நாட்டின் ஜனாதிபதியாகியிருக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரநாயக்கவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் நான் ஒருபோதும் நெறிமுறையற்ற ஜனாதிபதியாக இருக்கமாட்டேன். மக்களின் விருப்பமின்றி எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்த அவர், அமைச்சுப் பதவிகளை வகிக்காமல் பாராளுமன்றக் குழு அமைப்பின் ஊடாக கைகோர்த்து நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் எனவும் தெரிவித்தார்.
Be First to Comment