வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இடம் பெற்றது.
குறித்த மருத்துவ முகாம் நிறைவடைந்து நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தின்போது வாகனத்தின் முன் பகுதி முற்றாக சேதம் அடைந்துள்ளது. எனினும் காரில் இருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பாக முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
Be First to Comment