ஓய்வு பெறும் வயதைக் குறைக்கும் முடிவால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளதாகவும், இதன் காரணமாக, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 2,000 கோடி ரூபா ஓய்வூதியத் தொகையை வழங்க, புதிய பணம் அச்சிடப்பட உள்ளதாகவும், நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுவரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத் தொகை ஆயிரத்து தொன்னூறு கோடி ரூபாவாகும் என பொது நிர்வாக அமைச்சு வட்டாரங்கள் நேற்று (08) தெரிவித்தன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் இந்த நிலுவைத்தொகையைச் செலுத்த, கண்டிப்பாக பணம் அச்சிட வேண்டும் என்றும், அது தற்போதைய நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தொகையைத் தக்கவைக்க வேண்டியதன் காரணமாக ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த கடந்த வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிலையில், ஓய்வூதிய வயதை மீண்டும் தற்போதைய நிலைக்குக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
Be First to Comment