தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் புனர்வாழ்வு அல்லது சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளின் பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி பரிந்துரைத்துள்ளது.
இந்த செயலணியின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஏலவே கையளிக்கப்பட்டது.
இதில் 43 பரிந்துரைகள் உள்ளடங்குகின்றன.
அவற்றில் தற்போது அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறான கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு நடவடிக்கையுடன் விடுதலை செய்யப்பட வேண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அரசியல் கைதிகள் மீது நீதிமன்றில் பாரிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அதனை கருத்திற் கொள்ளாது அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டின் விசேட சட்டங்களாக நடைமுறையில் உள்ள கண்டி சட்டம், தேசவழமை சட்டம் மற்றும் முஸ்லீம் சட்டம் என்பன அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
இதற்காக அந்த சட்டங்களை நீக்குவது மற்றும் சீர்திருத்துவது ஆகிய நடவடிக்கைகளுக்கான சரத்துக்களையும் அந்த செயலணி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Be First to Comment