முஹம்மது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் எனும் இயற்பெயர் கொண்ட மலையாள சூப்பர் ஸ்டாரான இவர் மம்முட்டி எனும் பெயரால் நன்கு அறியப்பட்டவராவார்.
கண்டியிலுள்ள கடுகன்னாவ உள்ளிட்ட நான்கு இடங்களில் படமாக்கப்படவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு இலங்கையில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை சுற்றுலாத் தூதுவர் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய ஆகியோரும் அவரைச் சந்திப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் மம்முட்டி தற்போது இந்தியத் திரையுலகில் 5 தசாப்தங்களை வெற்றிகரமாக முடித்துள்ளதுடன் சுமார் 400 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment