Press "Enter" to skip to content

கோட்டாபய ராஜபக்ஷ நாளை தாய்லாந்து செல்லவுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்காலிக தங்குமிடமாக நாளை தாய்லாந்துக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ ஜூலை 14 அன்று மாலைதீவு வழியாக சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார்.

அதனை தொடர்ந்து தனது பதவியையும் இராஜினாமா செய்தார்.

முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு நாளை பாங்காக் செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரொய்ட்டர்ஸீன் கோரிக்கைகளுக்கு தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சு பதிலளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு எந்த சலுகைகளையும் விலக்குகளையும் வழங்கவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *