பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் வைபவத்துக்கான முழு செலவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பணத்தில் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அன்றைய தேநீர் விருந்துக்கு செலவிடப்பட்ட 272,000 ரூபா ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது.இந்த நெருக்கடி மிக்க காலப்பகுதியில் அரசாங்க செலவினங்கள் குறைந்த பட்சமாக இருக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கொள்கைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்..
தேநீர் விருந்துக்கான செலவை ஜனாதிபதி ஏற்றார்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment