ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைக்குமாறு வலியுறுத்தியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த போராட்டங்கள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் பிரதான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எவ்வாறாயினும், கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரணில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் (Sarath Fonseka) மறைமுக ஏற்பாட்டில் இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment