வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கொவிட் தொற்று காரணமாக அந்தக் குடும்பஸ்தர் நேற்று மரணமடைந்துள்ளார்.
இவர் செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடையவர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
Be First to Comment