Press "Enter" to skip to content

சஜித்தை கைவிட்டு அரசாங்கத்தில் இணைய தயாராகும் மூத்த உறுப்பினர்கள்

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

நாடு பொருளாதார ரீதியாக பாரதூரமான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் சந்தர்ப்பத்தில் கூட்டாக இணைந்து நாட்டை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நாட்டை மீட்க அரசாங்கத்தில் இணையவில்லை என்றால் மக்கள் நிராகரிப்பார்கள்

சஜித்தை கைவிட்டு அரசாங்கத்தில் இணைய தயாராகும் மூத்த உறுப்பினர்கள் | Senior Members Abandoning Sajith

 

நாட்டின் தற்போதய தருணத்தில் அரசாங்கத்தில் இணைந்து நாட்டை மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும் எனவும் அப்படி செய்யவில்லை என்ற மக்கள் மத்தியில் தமது அரசியல் நிராகரிக்கப்படும் என அந்த கட்சியில் முக்கிய பதவிகளை வகிக்கும் மூத்த உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏதேனும் ஒரு வகையில் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையவதில்லை என கட்சி தீர்மானித்தால், தாம் தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்தில் இணைய போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பினர்கள் உட்பட சிலர், கட்சிக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *