Press "Enter" to skip to content

பிரித்தானிய பெண்ணை வெளியேற உத்தரவிட்ட இலங்கை அரசு!

சமூக ஊடகங்களில் காலிமுகத்திடல் போராட்டத்தின் எதிர்ப்பு உள்ளடக்கத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆகையால் அவரை ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரித்தானிய பெண்ணை வெளியேற உத்தரவிட்ட இலங்கை அரசு! | The Sri Lankan Government British Woman To Leave

முன்னதாக, கெய்லி பிரேசர (Kaylee Fraser)விசா நிபந்தனைகளை மீறியதால் அவரது கடவுச்சீட்டை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம கைப்பற்றியிருந்தது.

விசாரணைக்காக 07 நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விளக்கமளிக்குமாறு கெய்லி பிரேசருக்கு(Kaylee Fraser) அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே தற்போது அவர் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறவேண்டும் என்று உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *