முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, விசுவமடு வள்ளுவர்புரம் கிராமத்தில், கடந்த காலங்களில், மக்களின் வீடுகளுக்குள் புகுந்து, மோட்டார், தேங்காய், பெற்றோல், சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த சிறுவன், பெற்றோல் திருடும் போது, மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டதனால், மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.
15 வயதுடைய சிறுவன், வள்ளுவர் புரம் கிராமத்தில், வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் மோட்டர்கள், தென்னை மரங்களில் ஏறி தேங்காய்கள் பறித்தல், வழிப்பறி உள்ளிட்ட கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், அண்மைய நாட்களாக, வீடுகளில் நிக்கும் மோட்டார் சைக்கிள்களில், பெற்றோல் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டுள்ளன.
அதனால், திருட்டு சம்பவங்கள் தொடர்பில், மக்கள், பொலிசாருக்கு தகவல் வழங்கியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில், இன்று அதிகாலை வேளை, வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளில், ஆண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருந்த, 4 லீற்றர் பெற்றோலை திருடிய சிறுவன், பெண்கள் ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து, பெற்றோலை திருட முற்பட்ட போது, இருட்டு காரணமாக, வெளிச்சத்திற்காக, தீ பெட்டியில், தீக்குச்சினை பற்ற வைத்துள்ளார்.
இதன் போது, தீ, மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோல் வரும் பைப்பில் பற்றி, மோட்டார் சைக்கில் தீ பற்றிக் கொண்டுள்ளது.
வீட்டார், தீடீரென விழித்து பார்த்த போது, திருடன் பாய்வதை கண்டும், மோட்டார் சைக்கிள் பற்றி எரிவதை கண்டும், அயலவர்களை அழைத்து, தீயை அணைத்தனர்.
அத்துடன், திருடன் அருகில் உள்ள பற்றைக் காட்டில் மறைந்திருந்த வேளை, இளைஞர்கள் ஒன்றுதிரண்டு, திருடனை பிடித்து கட்டி வைத்து, பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பொலிஸார், திருடனை கைது செய்ததுடன், எரிந்து சேதமான மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றனர்.
முல்லைத்தீவில், பெற்றோல் திருடும் போது, மோட்டார் சைக்கிள் தீப்பற்றியது : திருடன் அகப்பட்டான்!
More from UncategorizedMore posts in Uncategorized »
- லாப்ஸ் கேஸ் விலை அதிகரிப்பு
- முல்லைதீவு வைத்தியசாலையின் அகநோக்கி (Endoscopy) இயந்திரம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது
- முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – எந்தப் பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலியுறுத்து!
- வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை
- இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்
Be First to Comment