மாநகரசபைக்கு சொந்தமான வீதியை குறுக்கே கொத்தி குழாய் பொருத்திய நபரிடம் 3 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு மற்றும் தண்டப்பணம் யாழ்.மாநகரசபையினால் பெறப்பட்டுள்ளது.
யாழ்.நகரின் மத்தியிலுள்ள குடியருப்பாளர் ஒருவர் வீதியின் மறுபக்கம் உள்ள வெள்ள வாய்க்காலில் தனது வீட்டு கழிவு நீரை விடுவதற்காக வீதியை குறுக்கே கொத்து குழாய் பொருத்தியிருக்கின்றார்.
இது தொடர்பில் அறிந்து விசாரணைகளை முன்னெடுத்த மாநகர சபை அதிகாரிகள், வீதியை சேதப்படுத்தியமை, வெள்ள நீர் ஓடுவதற்காக கட்டப்பட்ட வாய்க்காலுக்குள் கழிவு நீரினை விட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை குடியிருப்பாளர் மீது சுமத்தினர்.
இதனையடுத்து குடியிருப்பாளர் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்டமையை அடுத்து, வீதியை சேதப்படுத்தியமைக்கான மேலும் குறித்த நபரிடம் இருந்து நஷ்ட ஈடு மற்றும் தண்டப்பணமாக 3 இலட்சத்து 87ஆயிரம் ரூபாயை மாநகர சபை அறவிட்டுள்ளது.
Be First to Comment