கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் நேற்று வரை 3310 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்தக் குழுவில் இருந்து 1182 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாகவும் ஏனைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் எண்ணூற்றி ஐம்பத்தெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்தச் சம்பவங்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்
Be First to Comment