கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியோர் வெளியேறியுள்ள நிலையில் அங்கிருந்து கஞ்சா செடிகள், மற்றும் சிம் அட்டைகள், சிறின்ஸ் போன்றன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெருமளவிலான மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அவை போதை மாத்திரைகளாக இருக்கக்கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காலிமுகத்திடல் பகுதியில் நேற்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து அப்பகுதியில் அகற்றப்படாமல் எஞ்சியிருந்த கூடாரங்கள் அகற்றும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போதே இவ்வாறு கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன.
Be First to Comment