யாழ்.நகரில் தொலைபேசி விற்பனை நிலையம் நடத்திவரும் இளைஞன் மீது யாழ்.நகரை அண்டிய கே.கே.எஸ்.வீதி – மனோகரா சந்தியில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொல்புரம் மேற்கு சுழிபுரம் பகுதியை சேர்ந்த எம்.லக்ஸ்சாந்தன் (லக்கி) (வயது 34) என்பவர் மீதே வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது கடையை மூடிய பின்னர்,
காங்கேசன்துறை வீதி ஊடாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மனோரா திரையரங்குக்கு அருகில் வைத்து வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர்
சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில்,
முன் பகை காரணமாகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Be First to Comment