வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் சட்டவிரோத மரக் கடத்தலில் ஈடுபட்ட அறுவரையும் கடற் படையினர் கைது செய்ததோடு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்திப்பகுதியில் உள்ள கடற்படை காவலரன் வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு உழவு இயந்திரத்தையும் வழிமறித்து சோதனையிட்ட வேளை சட்டவிரோதமான முறையில் பனை வெட்டப்பட்டு கடத்திச் செல்லப்படுகின்றமை தெரிய வந்தது.
இதனையடுத்து குறித்த உழவு இயந்திரத்திற்கு உடந்தையாக இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவரையும் மற்றும் உழவு இயந்திரத்தில் பனைமர குற்றிகளுடன் பயணித்த மூவரையும் உழவு இயந்திரம் ஒன்றையும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கடற்படையினர் கைப்பற்றியதோடு மர கடத்தலில் ஈடுபட்ட அறுவரில் இருவர் காரைநகரை சேர்ந்தவர்கள் என்றும் நால்வர் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது.
இதனையடுத்து சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட வாகனங்களும் பட்டுக்கோட்டை பொலிசாரிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டதோடு மேலதிக விசாரணை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது
Be First to Comment