இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA) இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் (NFP) கீழ் அதிகளவான வாகனங்களைக் கொண்ட வணிக நிறுவனங்கள் தமது வணிகப் பதிவு எண்களுடன் (BRN) பதிவு செய்ய முடியும் என இன்று தெரிவித்துள்ளது.
அரசு நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவன ங்கள் BRN பிரிவின் கீழ் தங்கள் வாகனங்களை ஒன்று அல்லது பல மொபைல் எண்கள் மூலம் பதிவு செய்யலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர் . இத்தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர்அவ்வாகனங்களுக்கு QR குறியீடு வழங்கப்படும்.
இதேவேளை, புதிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறைமையுடன் கூடிய விரைவில் பதிவு செய்யுமாறும், சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பெறுவதற்கு முறையற்ற வழிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இயந்திரங்களுக்கான எரிபொருள் தேவைகள் வாராந்த எரிபொருள் தேவையை மேற்கோள் காட்டி அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Be First to Comment