யாழ் கல்வியங்காட்டில் திருட்டு போன மோட்டர் சைக்கிள் மீட்பு!
யாழ்ப்பாணம் கல்வியங்காடு கலைமகள் வீதியில் அமைந்துள்ள வீடோன்றில் நேற்று நள்ளிரவு (12) திருடப்பட்ட டிஸ்கவர் மோட்டர் சைக்கிள் இன்று (13) காலை பொது மக்கள் உதவியுடன் தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் முன்பாக நிறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் முன்பாக நின்ற தகவல் கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.
குறித்த இடத்திற்கு விரைந்த கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் மோட்டர் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.
தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதோடு நீதிமன்றில் பாரப்படுத்தும் நடவடிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
Be First to Comment