Press "Enter" to skip to content

பாரிய தொகை போதைப்பொருளுடன் இந்தியாவில் கைதான இலங்கையருக்கு LTTEயுடன் தொடர்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு பாரிய அளவான போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதம் என்பவற்றுடன் மீட்கப்பட்ட இலங்கை படகில் கைதானவர்களில் ஒருவரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி சட்டவிரோதமாக பயணித்த மீன்பிடி படகு ஒன்றுடன் 6 இலங்கையர்கள் கொச்சி உப வலய போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பாரிய தொகை போதைப் பொருட்கள், ஏ.கே -47 ரக துப்பாக்கிகள் 5 மற்றும் ஆயிரம் தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டன.

தகுந்த ஆவணங்கள் இன்றிய நிலையில், இந்திய குடிவரவு குடியகல்வு சட்டத்தினை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட அறுவரில் ரமேஷ் என்பவருக்கு தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக ஆயுத மற்றும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரமேஷ் என்பவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கை மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *