Press "Enter" to skip to content

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கி ரணில் விசேட உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது.

அதற்கமைய உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.

பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கி ரணில் விசேட உத்தரவு | Ban On Key Tamil Diaspora Groups Lifted Sri Lanka

 

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கமும், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களை தடை செய்து இருந்தன.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *