நுவரெலியா நகருக்கு அருகிலுள்ள ஆறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா – பம்பரக்கலை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேற்படி, இளைஞரை கடந்த 3 ஆம் திகதி முதல் காணவில்லை என கடந்த 6 ஆம் திகதி அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.
விறகு தேடுவதற்காக கடந்த 3 ஆம் திகதி வீட்டில் கூறிவிட்டு சென்ற இளைஞன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை எனவும் இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விறகு தேடி சென்ற பகுதியில் ஆற்றை கடக்க முற்பட்டபோது, கால் தவறி ஆற்றில் விழுந்து, நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சி அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி மூலம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து குறித்த இளைஞர் 12 நாட்களின் பின்னர் இன்று(15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து நுவரெலியா காவல்துறையினர் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.





Be First to Comment