Press "Enter" to skip to content

பிரித்தானியாவில் நிலவும் கடும் வறட்சி!பல்பொருள் அங்காடிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

பிரித்தானியாவில் பல பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல்பொருள் அங்காடிகளில் தண்ணீர் போத்தல் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, 3 முதல் 5 குடிநீர் போத்தல்களை மாத்திரம் வாங்கும்படி  அங்காடிகள் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளன.

மேலும் அதிக வெப்பம் காரணமாக உருளைக் கிழங்கு, ஆப்பிள் போன்ற பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளதாகவும்,உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவில் நிலவும் கடும் வறட்சி!பல்பொருள் அங்காடிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் | Declared Droughts Around England

கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்

மேலும், வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்வதை தடை செய்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தெற்கு இங்கிலாந்தில் செப்டெம்பர் வரை தொடர்ந்து வறண்ட வானிலை இருக்கும் என்று வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, உருளைக்கிழங்கு, ஆப்பிள், ஹாப்ஸ், ப்ரோக்கோலி மற்றும் முளைகள் போன்ற பயிர்கள் வெப்பத்தால் சேதமடைந்துள்ளமையினால் அடுத்த ஆண்டு பயிர்களை பயிரிடுவது குறித்து விவசாயிகள் சந்தேகம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *