Press "Enter" to skip to content

யாழில் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து கோரும் கனடா மாப்பிள்ளை!

யாழில் திருமணம் முடிந்து இரண்டு வாரங்களின் பின்னர் கனடா திரும்பிய மணமகன், கனடா சென்று ஒரு மாதத்தில், தனது சட்டத்தரணி ஊடாக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனது மனைவியின் நடத்தை தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது விவாகரத்து மனுவில் கனடா மணமகன் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

யாழில் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து கோரும் கனடா மாப்பிள்ளை! | Canadian Groom Divorce Within One Month Jaffna

யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் இந்த விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வடமராட்சி பகுதியை பூர்வீகமாக கொண்ட அந்த இளைஞன் குடும்பத்துடன் கனடாவில் வசித்து வசிக்கிறார். கடந்த ஓரிரு வருடங்களின் முன்னர் பெற்றோர் அந்த இளைஞரும் சொந்த ஊருக்கு வந்து தங்கியுள்ளனர்.

இதன்போது தமது மகனிற்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, யாழ் நகரிலுள்ள திருமண சேவை நிறுவனம் ஒன்றின் ஊடாக, மணமகளொருவரை பெற்றோர் கண்டறிந்தனர்.

யாழில் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து கோரும் கனடா மாப்பிள்ளை! | Canadian Groom Divorce Within One Month Jaffna

யாழ் நகருக்கு அருகிலுள்ள பகுதியொன்றை சேர்ந்த குறித்த 24 வயதான யுவதிக்கும், 32 வயதான மணகனிற்கும், கடந்த 2 மாதங்களின் முன்னர் திருமணம் நிகழ்ந்தது. அதேவேளை திருமணத்திற்கு முன்னதான சடங்கொன்று நடைபெறும் நாளில், மணமகளும், பிறிதொரு இளைஞனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் உள்ள சுவரொட்டியொன்று மணகனின் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரவு வேளையில் ஒட்டப்பட்ட சுவரொட்டியை மறுநாள் காலையிலேயே உறவினர் ஒருவர் அவதானித்து தகவல் வழங்கியதால், உடனடியாக மணமகன் குடும்பத்தினர் அதை கிழித்து விட்டனர். அத்துடன் மணமகளிற்கு காதல் விவகாரம் இருந்த விடயம் இதன் பின்னரே தெரிய வந்து, திருமணத்தில் சர்ச்சையேற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

யாழில் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து கோரும் கனடா மாப்பிள்ளை! | Canadian Groom Divorce Within One Month Jaffna

 

எனினும், காதல் தொடர்பை பல மாதங்களின் முன்னரே யுவதி தவிர்த்து விட்டதாகவும், எனினும் அந்த காதலன் தொடர்ந்து தொல்லை தருவதாகவும் மணமகள் தரப்பில் கூறப்பட்டு, இரு தரப்பிற்கிடையிலும் சமரசம் ஏற்பட்டு திருமணம் நடந்து முடிந்ததாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தற்போது கனடாவில் வதியும் குறித்த மணமகன் , சட்டத்தரணி ஊடாக யாழ் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றமொன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *